அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் · FAQ

தமிழ் இலக்கிய மன்றம் பற்றிய கேள்விகளும் பதில்களும் — நிகழ்வுகள், போட்டிகள், அணிகளில் இணைதல், நூல்கள், தொடர்பு. Questions and answers about the Tamil Literary Association, University of Moratuwa.

மன்றம் பற்றி About TLA

தமிழ் இலக்கிய மன்றம் (TLA) என்றால் என்ன?

மொறட்டுவைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் (Tamil Literary Association - TLA) பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களால் இயங்கும் ஒரு மாணவர் அமைப்பு. தமிழின் கலை, கலாச்சாரம், இலக்கியம், பண்பாடு ஆகியவற்றைப் பேணி வளர்ப்பதோடு, மாணவர்களின் ஆளுமை விருத்திக்கும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்கும் உதவிக்கரம் நீட்டுகிறது.

What is the Tamil Literary Association (TLA)?

The Tamil Literary Association (TLA) of the University of Moratuwa is a student organisation run by the university's Tamil students. It preserves and promotes Tamil arts, culture, literature and heritage, and reaches out to help students grow and to support Tamil communities.

TLA எங்கே இயங்குகிறது?

இலங்கையின் கட்டுபெத்தையில் உள்ள மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் (University of Moratuwa) மன்றம் இயங்குகிறது. பல நிகழ்வுகள் பல்கலைக்கழக வளாகத்திலும், தமிழருவி, சொற்கணை இறுதிச் சமர் போன்ற பெரிய நிகழ்வுகள் தலைநகர் கொழும்பிலும் நடைபெறுகின்றன.

Where is TLA based?

TLA is based at the University of Moratuwa in Katubedda, Sri Lanka. Many events take place on campus, while big events such as Thamilaruvi and the Sotkanai grand final are held in Colombo.

மன்றத்தின் நோக்கங்கள் என்ன?

மொழி விருத்தி, ஆளுமைத்திறன் வழிகாட்டல், உதவிக்கரம் ஆகியவையே மன்றத்தின் முக்கிய நோக்கங்கள்:

  • பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களிடம் தமிழ் மொழி அறிவையும் திறமைகளையும் வெளிக்கொணர்தல்
  • மாணவர்களின் ஆளுமைத்திறன், அடுத்தகட்டத் தொழில் மற்றும் உயர்கல்வி நகர்வுகளுக்கு வழிகாட்டுதல்
  • வறுமையில் வாடும் மக்களுக்கு உதவுவதும் அவர்களின் நிலையை உலகறியச் செய்வதும்

What are TLA's aims?

TLA's main aims are language development, personal-growth guidance and a helping hand:

  • Bringing out Tamil language skills and talents in university and school students
  • Guiding students in personal development, careers and higher studies
  • Helping people living in poverty and making their situation known to the world

மன்றம் முன்னெடுக்கும் முக்கிய செயற்பாடுகள் எவை?

  • கலை விழாக்கள்: தமிழருவி, தைப்பொங்கல், வாணி விழா
  • போட்டிகள்: சொற்கணை, நிரலி, பிரம்மம் (ஒளிச்சுவடு உட்பட)
  • சமூகப் பணிகள்: ஜீவநதி, உதவித்தொகை, இரத்ததான முகாம், கோவில் பணிகள்
  • வழிகாட்டல்: அரமியம்
  • வளாக நிகழ்வுகள்: PPL, திரைப்பட இரவு, உணவுத் திருவிழா

What are TLA's main activities?

  • Festivals: Thamilaruvi, Thai Pongal, Vani Vizha
  • Competitions: Sotkanai, Niraali, Brammam (including Olisuvadu)
  • Social service: Jeevanathi, scholarships, blood donation camp, temple service
  • Guidance: Aramiyam
  • Campus events: PPL, movie night, food festival

மன்றம் யாருக்காகச் செயற்படுகிறது?

மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களுக்காக மட்டுமன்றி, இலங்கையெங்கும் உள்ள தமிழ் பாடசாலை மாணவர்களுக்கும் (சொற்கணை, நிரலி), உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கும் (பிரம்மம்), உதவி தேவைப்படும் மக்களுக்கும் (ஜீவநதி) மன்றம் செயற்படுகிறது.

Who does TLA work for?

Not only the Tamil students of the University of Moratuwa, but also Tamil school students across Sri Lanka (Sotkanai, Niraali), Tamil communities around the world (Brammam) and people in need of help (Jeevanathi).

மன்றத்தின் முழக்கம் என்ன?

"தமிழுக்காய் நாம் ! நமக்கேயான தமிழ் !!"

முகப்புப் பக்கத்தை அலங்கரிக்கும் வாசகம்: "தித்திக்கும் தமிழில் நித்திலம் சொரிய எத்திக்கும் அதிர்ந்திட சங்கே முழங்கு!"

What is TLA's motto?

"தமிழுக்காய் நாம் ! நமக்கேயான தமிழ் !!" - "We are for Tamil, and Tamil is ours!"

The verse on the home page: "தித்திக்கும் தமிழில் நித்திலம் சொரிய எத்திக்கும் அதிர்ந்திட சங்கே முழங்கு!" - "Let sweet Tamil shower pearls; sound the conch so it echoes in every direction!"

மன்றத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?

தற்போது 925 உறுப்பினர்கள் எம்மோடு இணைந்து பயணிக்கின்றனர். உறுப்பினர்கள் பக்கத்தில் அனைவரையும் காணலாம்.

How many members does TLA have?

925 members are travelling with us right now. You can see them all on the Members page.

வரலாறு History

மன்றம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

1968 ஆம் ஆண்டு, தமிழின் கலை, கலாசார, இலக்கிய, பண்பாடுகளைப் பேணி எதிர்காலச் சந்ததிக்குக் கொண்டு சேர்க்கும் நோக்குடன் "தமிழ் மன்றம்" என்ற பெயரில் மன்றம் உருவாக்கப்பட்டது.

When was TLA founded?

TLA was founded in 1968 as the "Tamil Mantram", to preserve Tamil arts, culture, literature and heritage and pass them on to future generations.

மன்றத்தின் பெயர் எப்படி மாறியது?

  • 1968 - "தமிழ் மன்றம்" ஆக ஆரம்பம்
  • 1973 - "தமிழ் சங்கம்" எனப் பெயர் மாற்றம்
  • 1990களின் ஆரம்பம் - "இலக்கிய மன்றம்" என மீண்டும் பெயர் மாற்றம்; இன்று "தமிழ் இலக்கிய மன்றம்"

How has TLA's name changed?

  • 1968 - founded as "Tamil Mantram"
  • 1973 - renamed "Tamil Sangam"
  • Early 1990s - renamed "Ilakkiya Mantram"; today the "Tamil Literary Association"

"நுட்பம்" சஞ்சிகை என்றால் என்ன?

கவிதை, கட்டுரை, நாடகம், விவாதம் எனத் தமிழின் கலையம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய மன்றத்தின் முதல் சஞ்சிகை "நுட்பம்". மன்றம் ஆரம்பித்த காலத்திலேயே வெற்றிகரமாக வெளியிடப்பட்டது. 1970 இல் வெளியான இரண்டாவது இதழை இணையதளத்திலேயே வாசிக்கலாம்.

What is the "Nutpam" magazine?

"Nutpam" was TLA's first magazine, bringing together poetry, essays, drama, debate and every art form of Tamil. It was published successfully from TLA's earliest days. You can read the second issue, published in 1970, right on this website.

மன்றத்தின் முதல் கலாச்சார விழா எப்போது நடந்தது?

1970 இல் "கலை விழா" என்ற பெயரில், கொழும்பு இராமகிருஷ்ண மிசன் மண்டபத்தில் முதல் கலாச்சார விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அதே விழாவில் இரண்டாவது "நுட்பம்" இதழும் வெளியிடப்பட்டது. 1971, 1972 களிலும் கலை விழாக்கள் தொடர்ந்தன.

When was TLA's first cultural festival held?

In 1970 the first cultural festival, "Kalai Vizha", was held grandly at the Ramakrishna Mission Hall in Colombo. The second issue of "Nutpam" was released at the same festival. Kalai Vizhas continued in 1971 and 1972.

நாடகத் துறைக்கு மன்றத்தின் பங்களிப்பு என்ன?

1972-1980 காலப்பகுதி ஈழத்து நாடக வரலாற்றில் முக்கியமான காலம். இக்காலத்தில் மன்றம் 19 நாடகங்களை மேடையேற்றியது - தமிழ்ச் சங்கம் அடைந்த பெரும் மைல்கல் இது. 1976-1979 வரை கலை நிகழ்ச்சிகள், விவாதங்கள், கருத்தரங்குகளும் நடைபெற்றன.

What did TLA contribute to Tamil drama?

1972-1980 was an important period in the history of Eelam Tamil drama. During that time TLA staged 19 plays - a major milestone for the Tamil Sangam. From 1976 to 1979 it also held arts programmes, debates and seminars.

மன்றத்தின் செயற்பாடுகள் எப்போதாவது நின்றனவா?

ஆம். 1980களின் இடைப்பகுதியில் இனப்பிரிவினை ஆழ வேரூன்றியதால் தலைநகரில் பல்கலைக்கழகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால் மன்றத்தின் செயற்பாடுகள் சில ஆண்டுகள் நிறுத்தப்பட்டன. 1990களின் ஆரம்பத்தில் தமிழ் மாணவர்களின் அக்கறையால் மீண்டும் தொடங்கின.

Did TLA's activities ever stop?

Yes. In the mid-1980s, as ethnic division took deep root, universities in the capital were badly affected, and TLA's activities were halted for a few years. They restarted in the early 1990s thanks to the dedication of Tamil students.

போர்க்காலத்திலும் மன்றம் இயங்கியதா?

ஆம். 1990களின் பிற்பகுதி முதல் 2000களின் ஆரம்பம் வரை ஈழப்போர் உச்சம் பெற்ற காலத்திலும் மன்றம் தன் கடமையைத் தொடர்ந்தது. இனப்பிரச்சினை, கலவரம், பொருளாதாரச் சிக்கல் என அத்தனை வளைவுகளிலும் பயணித்து, ஐந்து தசாப்தங்களைக் கடந்தும் மன்றம் உறுதியாக நிற்கிறது.

Did TLA keep going during the war?

Yes. Even when the Eelam war was at its height, from the late 1990s to the early 2000s, TLA carried on with its work. Through ethnic conflict, riots and economic hardship, it has stood firm for more than five decades.

மன்றம் எத்தனை ஆண்டுகளாக இயங்குகிறது?

1968 இல் ஆரம்பிக்கப்பட்ட மன்றம் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக - தலைமுறை தலைமுறையாக மொறட்டுவைத் தமிழ் மாணவர்களால் - தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

How long has TLA been running?

Founded in 1968, TLA has been run continuously for more than five decades - generation after generation of Tamil students at Moratuwa.

மன்றத்தின் வரலாற்றை எங்கே விரிவாக அறியலாம்?

"எமது வரலாறு" பக்கத்தில் 1968 முதல் இன்றுவரையான பயணத்தைப் படங்களுடன் வாசிக்கலாம். அப்பக்கத்தின் மேலே தமிழருவியின் வரலாறு பற்றிய காணொளியும் உள்ளது.

Where can I learn more about TLA's history?

The "Our history" page tells the story from 1968 to today, with photos. A video on the history of Thamilaruvi is at the top of that page.

கலை விழாக்கள் Festivals

தைப்பொங்கல் விழா எப்படிக் கொண்டாடப்படுகிறது?

மதபேதமின்றி, சூரியனுக்கும் விளைச்சலுக்கு உதவிய கால்நடைகளுக்கும் நன்றி கூறும் முகமாக, தை மாதம் பல்கலைக்கழக வளாகத்தினுள் பாரம்பரிய முறையில் பொங்கல் பொங்கப்படுகிறது. பாரம்பரிய கலாச்சார உடையில், தின்பண்டங்களுடன் விருந்தோம்பலும் பாரம்பரியத் தமிழர் விளையாட்டுக்களுமாக விழாக்கோலம் காணும்.

How is Thai Pongal celebrated?

In the month of Thai, Pongal is cooked the traditional way on the university campus, regardless of religion, to thank the sun and the cattle that help the harvest. It's a festive day of traditional dress, sweets and hospitality, and traditional Tamil games.

பொங்கல் விழாவில் என்ன நிகழ்ச்சிகள் இருக்கும்?

கடந்த விழாக்களில் (எ.கா. 2023) இடம்பெற்றவை: பொங்கல் பூஜை, தமிழ்த்தாய் வாழ்த்து, நடனம், வாய்ப்பாட்டு, வில்லுப்பாட்டு, சிறப்புரைகள், பட்டிமன்றம், பாரம்பரிய விளையாட்டுகள். பொங்கலை ஒட்டி PPL கிரிக்கெட் திருவிழாவும் நடைபெறும்.

What happens at the Pongal festival?

Past festivals (for example 2023) included the Pongal pooja, the Tamil Thai Vazhthu, dance, vocal music, Villuppattu, special speeches, a Pattimandram debate and traditional games. The PPL cricket festival is also held around Pongal.

வாணி விழா என்றால் என்ன?

அந்திமாலைப் பொழுதில் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமாகும் விழா இது. கல்விக்கு சரஸ்வதி, செல்வத்திற்கு லஷ்மி, வீரத்திற்கு துர்க்கை ஆகிய முப்பெரும் தேவியருக்கான இறைவழிபாட்டுடன் ஆரம்பமாகி, இரவுப் பொழுதில் இனிதே நிறைவுறும்.

What is Vani Vizha?

A festival that begins at dusk on the university campus. It opens with worship of the three great goddesses - Saraswathi for learning, Lakshmi for wealth and Durga for courage - and closes happily late in the evening.

வாணி விழாவில் என்ன கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்?

இறைவழிபாட்டைத் தொடர்ந்து இசை, நடனம், வில்லுப்பாட்டு, பல்லியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

What performances are there at Vani Vizha?

After the worship come arts performances such as music, dance, Villuppattu and Palliyam (instrumental ensemble).

தமிழருவி என்றால் என்ன?

மன்றத்தின் மிகப்பெரிய கலை நிகழ்வு தமிழருவி. தமிழ் சமூகத்தின் கலை, கல்வி, கலாச்சாரம் ஆகியவற்றின் இன்றைய விருத்திக்கும் நாளைய இருப்பிற்கும் தூணாய் நிற்கும் நோக்குடன், வருடந்தோறும் தலைநகரில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

What is Thamilaruvi?

Thamilaruvi is TLA's biggest arts event. Held grandly in the capital every year, it aims to stand as a pillar for the growth today, and the future, of the Tamil community's arts, education and culture.

தமிழருவி எங்கே, எப்போது நடைபெறுகிறது?

தமிழருவி வருடந்தோறும் தலைநகர் கொழும்பில் நடைபெறுகிறது. உதாரணமாக, தமிழருவி 2024 ஒக்டோபர் 13 அன்று கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டின் திகதி, இடம் தமிழருவி பக்கத்திலும் எமது சமூக ஊடகங்களிலும் அறிவிக்கப்படும்.

Where and when is Thamilaruvi held?

Thamilaruvi is held in Colombo every year. For example, Thamilaruvi 2024 took place on 13 October at the Ramakrishna Hall in Colombo. Each year's date and venue are announced on the Thamilaruvi page and our social media.

தமிழருவியில் என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கும்?

தமிழருவி 2024 நிகழ்ச்சி நிரல்: மங்கல விளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம், தலைமை உரை, பிரதம விருந்தினர் உரை, இதழ் வெளியீடு, பல்லியம், நாடகம், மெல்லிசை, மக்கள் மன்றம், நடனம், நன்றியுரை.

What is on the Thamilaruvi programme?

The Thamilaruvi 2024 programme: lighting of the lamp, Tamil Thai Vazhthu, welcome dance, presidential address, chief guest's speech, magazine launch, Palliyam, drama, light music, Makkal Mantram, dance and vote of thanks.

தமிழருவியில் இதழ் வெளியிடப்படுகிறதா?

ஆம். ஒவ்வொரு ஆண்டும் தமிழருவி விழாவில் மன்றத்தின் இதழ் வெளியிடப்படுகிறது. அண்மைய இதழான "தமிழருவி'26 இதழ்" ஐ இணையதளத்தில் வாசிக்கவும் பதிவிறக்கவும் முடியும்.

Is a magazine released at Thamilaruvi?

Yes. TLA's magazine is launched at Thamilaruvi every year. You can read and download the latest one, the "Thamilaruvi'26 magazine", on this website.

போட்டிகள் Competitions

சொற்கணை என்றால் என்ன?

இலங்கையின் சிறந்த பாடசாலை விவாத அணியைத் தெரிவு செய்யும் விவாதச்சமர் சொற்கணை. மாவட்டரீதியில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த அணிகள், சமூகப் பிரச்சினைகள், இலக்கிய ஆராய்வு எனப் பன்முகத் தலைப்புகளில், தலைநகரில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் இறுதிச் சமரில் மோதுகின்றன.

What is Sotkanai?

Sotkanai is the debating battle that chooses Sri Lanka's best school debating team. The best teams selected at district level clash in the grand final in the capital, before thousands, on topics from social issues to literary analysis.

சொற்கணை எப்படி நடைபெறுகிறது?

முதலில் மாவட்ட மட்டப் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்வு செய்யப்படும் சிறந்த அணிகள் தலைநகரில் நடைபெறும் இறுதிக்கட்ட விவாதச்சமரில் பங்குபற்றும். மாவட்டப் போட்டி விபரங்களை சொற்கணை மாவட்டப் பக்கத்தில் காணலாம்.

How does Sotkanai work?

District rounds come first. The best teams chosen from each district then take part in the final debating battle in the capital. Details of the district rounds are on the Sotkanai district page.

சொற்கணையில் யார் பங்குபற்றலாம்?

இலங்கையின் தமிழ் பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலை அணியாகப் பங்குபற்றலாம். வயதெல்லை ஒவ்வொரு ஆண்டும் விதிமுறைகளில் அறிவிக்கப்படும் (உதாரணமாக 2024 இல்: 31-01-2004 இற்குப் பின்னர் பிறந்தவர்கள்).

Who can take part in Sotkanai?

Tamil school students in Sri Lanka can take part as a team from their school. The age limit is announced in each year's rules (for example in 2024: born after 31-01-2004).

சொற்கணை அணியில் எத்தனை பேர், எவ்வளவு நேரம்?

ஒவ்வொரு அணியும் 4 விவாதிகளையும் 1 உதிரி விவாதியையும் கொண்டிருக்க வேண்டும். தலைவர் உட்பட ஒவ்வொருவருக்கும் 4 நிமிடங்களும், இறுதியில் தலைவரின் தொகுப்புரைக்கு 5 நிமிடங்களுமாக, ஒரு அணிக்கு மொத்தம் 21 நிமிடங்கள் வழங்கப்படும்.

How many in a Sotkanai team, and how much time?

Each team has 4 debaters and 1 reserve. Every speaker, including the captain, gets 4 minutes, and the captain gets 5 more minutes for the closing summary - 21 minutes per team in all.

சொற்கணைக்கு எப்படிப் பதிவு செய்வது?

  • விண்ணப்பப் படிவத்தில் போட்டியாளர்களின் முழுப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்
  • பாடசாலை அதிபரின் கையொப்பத்துடன், போட்டி தினத்தன்று மாவட்ட இணைப்பாளரிடம் கையளியுங்கள்
  • மாவட்டப் போட்டிக்கு ஒரு கிழமை முன்னதாக, வருகையை மாவட்ட இணைப்பாளருக்குத் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்துங்கள் - உறுதிப்படுத்தாத அணிகள் அனுமதிக்கப்படமாட்டா

How do I register for Sotkanai?

  • Write the competitors' full names in English on the application form
  • Get it signed by your school principal and hand it to the district coordinator on the day of the competition
  • Confirm your attendance by phone with the district coordinator a week before the district round - teams that don't confirm won't be allowed to compete

சொற்கணையில் புள்ளியிடல் எப்படி?

அணிகளுக்கான தரப்படுத்தல் இசற் புள்ளி (z-score) முறையிலான புள்ளியிடல் திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும். விரிவான விளக்கம் போட்டி தினத்தன்று ஆரம்பத்தில் அறியத்தரப்படும். சுயாதீன நடுவர் குழாத்தின் தீர்ப்பே இறுதியானது. பேச்சுக்கள் தனிப்பட்ட தாக்குதல்களாகவோ இன, மத அவதூறுகளாகவோ அமையக்கூடாது.

How is Sotkanai judged?

Teams are ranked with a z-score marking scheme, explained in full at the start of the competition day. The decision of the independent panel of judges is final. Speeches must not be personal attacks or slurs about ethnicity or religion.

சொற்கணை 2024 வெற்றியாளர்கள் யார்?

  • 1ம் இடம்: கிளி / அன் திரேசா பெண்கள் பாடசாலை
  • 2ம் இடம்: யாழ் / இந்துக் கல்லூரி
  • 3ம் இடம்: வவுனியா தமிழ் மகா வித்தியாலயம்
  • சிறந்த விவாதி: வைஷ்ணவி சிவாஸ்கரன்

Who won Sotkanai 2024?

  • 1st place: Kili / Ann Theresa Girls' School
  • 2nd place: Jaffna Hindu College
  • 3rd place: Vavuniya Tamil Maha Vidyalayam
  • Best debater: Vaishnavi Sivaskaran

நிரலி (Ideathon) என்றால் என்ன?

வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப உலகில் சாதனையாளர்களைத் தேடும் மன்றத்தின் புதிய அத்தியாயம் நிரலி. இலங்கை முழுவதும் உள்ள தமிழ் பாடசாலை மாணவர்களின் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் திறன்களுக்குக் களம் அமைக்கும் அகில இலங்கை ரீதியான போட்டி இது.

What is Niraali (Ideathon)?

Niraali is a new chapter for TLA, searching for achievers in the growing world of information technology. It's an all-island competition that gives Tamil school students across Sri Lanka a stage for innovation and entrepreneurship.

நிரலியில் என்ன பரிசுகள் வழங்கப்படும்?

1ம், 2ம், 3ம் இடங்களுக்குப் பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்படும். பங்குபற்றும் அனைவருக்கும் இலத்திரனியல் சான்றிதழ் வழங்கப்படும். பரிசளிப்பு வைபவம் தமிழருவி விழாவில் நடைபெறும்.

What prizes does Niraali offer?

Valuable prizes for 1st, 2nd and 3rd places, and an e-certificate for everyone who takes part. The prize-giving ceremony is held at Thamilaruvi.

பிரம்மம் என்றால் என்ன?

பாடசாலை மாணவர்கள் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளின் சிந்தனையாக்கம், பேச்சாற்றல், கற்பனைத்திறன், தொழில்நுட்ப ஆற்றல் போன்ற திறமைகளை வெளிக்கொணரும் போட்டிகள் பிரம்மம். இவை முற்றுமுழுதாக இணையவழியில் நடைபெறுவதால், வீட்டிலிருந்தே பங்குபற்றலாம்.

What is Brammam?

Brammam is a set of competitions that brings out the creative thinking, speaking, imagination and technical skills of school students and Tamils living around the world. They are run entirely online, so you can take part from home.

பிரம்மத்தில் என்னென்ன போட்டிகள் உள்ளன?

  • எழுத்தோவியம் - சிந்தனையாக்கத் திறனை வெளிக்கொணரும் எழுத்தாக்கப் போட்டி
  • ஒளிச்சுவடு - புகைப்படப் போட்டி
  • மீரிகை - எண்ணிமச் சித்திர (digital art) போட்டி
  • சொலல்வலர் - பேச்சாற்றல் போட்டி

ஒவ்வொரு போட்டியின் பக்கத்திலும் தலைப்புகளும் விதிமுறைகளும் உள்ளன.

Which competitions are in Brammam?

  • Eluthoviyam - a writing competition for creative thinking
  • Olisuvadu - a photography competition
  • Meerigai - a digital art competition
  • Solalvalar - a public-speaking competition

Each competition's page has its themes and rules.

ஒளிச்சுவடு புகைப்படப் போட்டி பற்றி அறியலாமா?

தமிழ் மாணவர்களின் புகைப்பட ஆற்றலை வெளிக்கொணர மன்றம் நடத்தும் போட்டி ஒளிச்சுவடு. இது பிரம்மம் போட்டிகளில் ஒன்று என்பதால் இணையவழியில் பங்குபற்றலாம். தலைப்புகள், விதிமுறைகள் ஒளிச்சுவடு பக்கத்தில் உள்ளன.

Tell me about the Olisuvadu photography competition.

Olisuvadu is TLA's competition for bringing out Tamil students' photography skills. It's one of the Brammam competitions, so you can enter online. Themes and rules are on the Olisuvadu page.

பிரம்மம் வெற்றி ஆக்கங்கள் வெளியிடப்படுமா?

மன்றத்தின் நூலில் இடம்பெறக்கூடிய கூடுதல் ஆக்கங்களில் "பிரம்மப் போட்டியில் வெற்றியீட்டிய ஆக்கங்களும்" அடங்கும். வெளியீடு பற்றிய விபரங்களுக்கு படைப்பு சமர்ப்பிப்பு வழிகாட்டல்களைப் பாருங்கள்.

Are Brammam winning entries published?

The extra content that can appear in TLA's book includes "winning entries from the Brammam competitions". See the submission guidelines for publishing details.

சமூகப் பணிகள் Social service

ஜீவநதி என்றால் என்ன?

ஜீவநதி மன்றத்தின் ஜீவ காருண்யப் பயணம். வறுமையில் வாழ்நிலையைத் தொலைத்த பின்தங்கிய பிரதேச மக்களுக்கு உதவுவதோடு, அவர்களின் துயரையும் வெளியுலகம் அறியச் செய்கிறது.

What is Jeevanathi?

Jeevanathi is TLA's journey of compassion. It helps people in underprivileged areas who have lost their livelihoods to poverty, and makes their hardship known to the outside world.

ஜீவநதி மூலம் என்ன உதவிகள் வழங்கப்பட்டுள்ளன?

  • 2024 - முல்லைத்தீவு செம்மலை மகா வித்தியாலய மாணவர்களுக்கு ஐந்து துவிச்சக்கரவண்டிகள் (இலங்கை தமிழர் சமூகம் கத்தாரின் உதவியுடன்)
  • 2018 - பதுளை உடவெறியா பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள், புத்தகப்பை, சப்பாத்து உள்ளிட்ட பொருட்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிதியுதவி
  • 2018 - கிளிநொச்சி, முல்லைத்தீவு வெள்ள நிவாரணம்
  • 2014 - பதுளை மண்சரிவு நிவாரணம்

What help has Jeevanathi given?

  • 2024 - five bicycles for students of Semmalai Maha Vidyalayam, Mullaitivu (with the help of the Sri Lankan Tamil Community, Qatar)
  • 2018 - exercise books, school bags, shoes and other supplies for students of a school in Udaweriya, Badulla, and funds for the school's development
  • 2018 - flood relief in Kilinochchi and Mullaitivu
  • 2014 - landslide relief in Badulla

இயற்கை அனர்த்தங்களின் போது மன்றம் உதவியதா?

ஆம். 2018 இல் நாட்டின் பல மாவட்ட மக்களிடமிருந்து நிவாரணப் பொருட்களைச் சேகரித்து, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது. 2014 இல் பதுளை மாவட்டத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

Has TLA helped during natural disasters?

Yes. In 2018 TLA collected relief goods from people across many districts and gave them to flood-affected people in Kilinochchi and Mullaitivu. In 2014 it gave relief to people affected by landslides in Badulla district.

மன்றத்தின் கோவில் பணிகள் என்ன?

வருடந்தோறும் இரத்மலானையில் உள்ள திருநந்தீஸ்வர ஆலயத்தில் சிவராத்திரி, நவராத்திரி, தைப்பொங்கல் பூசைகள் மன்றத்தால் சிறப்பாக நடாத்தப்படுகின்றன. இந்நேரங்களில் மாணவர்களின் இறைவழிபாடுகளும் சிரமதானப் பணிகளும் நடைபெறுகின்றன.

What temple service does TLA do?

Every year TLA holds Sivarathri, Navarathri and Thai Pongal poojas at the Thirunandeeswarar temple in Ratmalana. Students take part in worship and shramadana (volunteer clean-up) work on those days.

இரத்ததான முகாம் பற்றி?

உயிர்களை வாழவைக்கும் உன்னதமான இரத்ததானத்தை, பல மாணவர்களினதும் உறவுகளினதும் பங்குபற்றலுடன் மன்றம் வருடா வருடம் முன்னெடுக்கிறது. அடுத்த முகாம் பற்றிய அறிவிப்புகளுக்கு எமது சமூக ஊடகங்களைப் பின்தொடருங்கள்.

Tell me about the blood donation camp.

Every year TLA runs a blood donation camp - the noble act of giving blood to save lives - with many students and well-wishers taking part. Follow our social media for news of the next camp.

அரமியம் என்றால் என்ன?

பல்கலைக்கழகக் கல்வியை முடித்து தொழில் மற்றும் உயர்கல்விக்குச் செல்லவிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான கலந்துரையாடல்களும் தொழில் வழிகாட்டல்களும் அடங்கிய நிகழ்ச்சி அரமியம்.

What is Aramiyam?

Aramiyam is a programme of discussions and career guidance about the future of students who are finishing university and heading into jobs or higher studies.

வளாக நிகழ்வுகள் Campus events

PPL என்றால் என்ன?

பொங்கல் விழாவை ஒட்டி, பல்கலைக்கழக மாணவர்களிடையே நட்புறவை ஏற்படுத்தும் கிரிக்கெட் திருவிழா PPL.

What is PPL?

PPL is a cricket festival held around Pongal to build friendships among university students.

PPL அணிகள் எப்படி அமைக்கப்படுகின்றன?

கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட மாணவர்களைக் கலந்து அணிகள் தெரிவு செய்யப்படுகின்றன. இதனால் வெவ்வேறு ஆண்டு மாணவர்கள் ஒன்றாக விளையாடி நட்பை வளர்க்கின்றனர்.

How are PPL teams formed?

Teams are picked by mixing junior and senior students, so students from different years play together and become friends.

அண்மைய PPL முடிவுகள் என்ன?

இணையதளத்தில் உள்ள போட்டி முடிவுகள்:

  • முதலாம் இடம்: Spicy Blasters
  • இரண்டாம் இடம்: Cheddi Nadu Supper King
  • விருது: Logithan

What were the latest PPL results?

The results on the website:

  • 1st place: Spicy Blasters
  • 2nd place: Cheddi Nadu Supper King
  • Award: Logithan

திரைப்பட இரவு என்றால் என்ன?

இயந்திரமாக ஓடி உடலாலும் மனதாலும் சோர்ந்திருக்கும் மாணவர்களின் மனங்களை இதமாக்க, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் திரைப்படக் காட்சிகள்.

What is movie night?

Film screenings on the university campus, to refresh students who are worn out in body and mind from running like machines.

உணவுத் திருவிழா என்றால் என்ன?

எமது பாரம்பரிய உணவுகளை சகோதர மொழி மாணவர்களுடன் பகிர்ந்துண்ணும் நிகழ்வு உணவுத் திருவிழா.

What is the food festival?

An event where we share our traditional foods with students who speak our sister language.

அணிகள் & இணைதல் Teams & joining

மன்றத்தில் என்னென்ன அணிகள் உள்ளன?

  • வலையமைப்பு அணி
  • ஊடக அணி
  • வடிவமைப்பு அணி
  • தொழில்நுட்ப அணி

ஒவ்வொரு அணியின் பணிகள், உறுப்பினர்கள், படைப்புகளை அணிகள் பக்கத்தில் காணலாம்.

What teams does TLA have?

  • Network team
  • Media team
  • Design team
  • Technical team

You can see each team's work, members and creations on the Teams page.

வலையமைப்பு அணி என்ன செய்கிறது?

இணையவழி முரசாக மன்றத்தின் புகழை தேசம் கடந்தும் பறைசாற்றுவது இவர்களின் பணி. உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக கடந்த கால நிகழ்வுகள், படைப்புகள் மற்றும் தமிழருவியில் வெளியிடப்படும் இதழ்களைக் காலத்தால் அழியாத வகையில் ஆவணப்படுத்துவதும் அறிக்கையிடுவதும் இவர்களின் தலையாய நோக்கம்.

What does the Network team do?

They spread TLA's name beyond the country as its online voice. Their main aim is to document and report - through the official website, in a way that lasts - TLA's past events and creations and the magazines released at Thamilaruvi.

ஊடக அணி என்ன செய்கிறது?

அனைத்து அணிகளின் உழைப்புக்கும் அழகியல் வடிவம் கொடுப்பவர்கள் இவர்கள். பல்லாயிரக்கணக்கான புகைப்படங்களைப் படம்பிடிப்பதோடு, பதாகைகள், நிகழ்ச்சிக் குறும் காணொளிகள் என வடிவமைப்புகளை மேற்கொண்டு மன்றத்தின் சமூக வலைத்தளங்களைக் கவர்ச்சியாக வைத்திருக்கின்றனர்.

What does the Media team do?

They give an aesthetic shape to every team's hard work. They take thousands of photos, design banners and short event videos, and keep TLA's social media looking great.

வடிவமைப்பு அணி என்ன செய்கிறது?

கலை எனும் கருவுக்குத் தொழில்நுட்பம் எனும் உயிர் செலுத்தி, அறிவியல் சார் வடிவமைப்புகள், மேடை அலங்காரம் என நிகழ்வுகளுக்கான கண்கவர் படைப்புகளை உருவாக்குகின்றனர். சங்க இலக்கியங்களின் ஐந்நில விழுமியங்களை முப்பரிமாணத் தோற்றத்தில் அமைத்த மேடை அலங்கரிப்பு இவர்களின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்று.

What does the Design team do?

Breathing the life of technology into art, they create striking designs for events, from science-inspired designs to stage decoration. One of their notable works is a stage that brought the values of the five landscapes of Sangam literature together in 3D.

தொழில்நுட்ப அணி என்ன செய்கிறது?

மொறட்டுவை ஒரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்பதைப் பறைசாற்றும் வகையில், நிகழ்வுகளின் வழமையான செயற்பாடுகளைத் தொழில்நுட்பம் கலந்த புதிய படைப்புகளாக மாற்றுவது இவர்களின் நோக்கம். தன்னியக்க முறையில் நூல் வெளியீடு, கண்கவர் ஒளி வடிவமைப்புகள், தொடுதிரை மூலம் மங்கல விளக்கேற்றல் ஆகியவை இவர்களின் படைப்புகள்.

What does the Technical team do?

Their aim is to turn the usual parts of an event into new, technology-rich creations, showing that Moratuwa is a technology university. Their work includes an automated book launch, eye-catching lighting design and lighting the ceremonial lamp by touchscreen.

ஒரு அணியில் எப்படி இணைவது?

"எங்கள் அணியில் இணையுங்கள்" படிவத்தில் உங்கள் பீடம், கல்வியாண்டு (batch), மாவட்டம், விரும்பும் அணி ஆகியவற்றைத் தெரிவு செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் திறந்திருக்கும் காலங்களில் மட்டுமே படிவம் ஏற்றுக்கொள்ளப்படும்.

How do I join a team?

Apply with the "Join our team" form by choosing your faculty, batch, district and preferred team. The form only accepts applications while applications are open.

அணிகளில் இணைய யார் தகுதியானவர்கள்?

மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் - பொறியியற், கட்டிடக்கலை, தகவல் தொழினுட்ப, வணிக முகாமைத்துவ பீடங்கள் உட்பட எந்தப் பீடத்தைச் சேர்ந்தவர்களும் - விண்ணப்பிக்கலாம்.

Who can join the teams?

Students of the University of Moratuwa from any faculty - including Engineering, Architecture, Information Technology and Business - can apply.

இணைவுப் படிவம் மூடப்பட்டிருக்கிறதே, என்ன செய்வது?

"தற்போது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை" எனக் காட்டினால், அடுத்த முறை விண்ணப்பங்கள் திறக்கப்படும் வரை காத்திருங்கள். திறக்கப்படும்போது எமது சமூக ஊடகங்களில் அறிவிக்கப்படும். அவசரமெனில் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.

The join form is closed - what should I do?

If it says applications aren't being accepted right now, please wait until they open again. We announce it on our social media when they do. If it's urgent, contact us.

நூல்கள் & படைப்புகள் Books & writing

நூல்கள் பக்கத்தில் என்ன உள்ளது?

மன்றத்தின் வெளியீடுகளும் பல்கலைக்கழக மாணவர்களின் வெளியீடுகளும் அங்கு உள்ளன. ஒவ்வொரு நூலையும் இணையதளத்திலேயே பக்கம் பக்கமாகப் புரட்டி வாசிக்கலாம்; PDF ஆகப் பதிவிறக்கவும் முடியும்.

What's on the Books page?

TLA's publications and university students' publications. You can turn through each book page by page right on the website, and download it as a PDF.

நூல்களைப் பதிவிறக்க முடியுமா?

ஆம். ஒவ்வொரு நூலின் பக்கத்திலும் "PDF" பதிவிறக்கப் பொத்தான் உள்ளது. சில நூல்களுக்கு (எ.கா. தமிழருவி'26 இதழ்) Word வடிவமும் உண்டு. நூலின் இணைப்பைப் பகிரவும் முடியும்.

Can I download the books?

Yes. Every book's page has a "PDF" download button. Some books (for example the Thamilaruvi'26 magazine) also come as a Word document. You can share a book's link too.

எனது படைப்பை எப்படிச் சமர்ப்பிப்பது?

மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் தமது படைப்புகளை மன்றத்தின் நூலுக்குச் சமர்ப்பிக்கலாம். முதலில் வழிகாட்டல்களை வாசித்து, பின்னர் சமர்ப்பிப்புப் படிவத்தில் Word (.doc/.docx) மற்றும் PDF கோப்புகளுடன் சமர்ப்பியுங்கள். சமர்ப்பிப்புகள் திறந்திருக்கும் காலத்தில் மட்டுமே படிவம் இயங்கும்.

How do I submit my writing?

University of Moratuwa students can submit their work for TLA's book. Read the guidelines first, then submit through the submission form with both a Word (.doc/.docx) and a PDF file. The form only works while submissions are open.

என்ன வகையான படைப்புகளைச் சமர்ப்பிக்கலாம்?

  • கவிதை (புதுக்கவிதை / மரபுக்கவிதை / ஹைக்கூ) - 16-32 வரிகள்
  • சிறுகதை - 350-500 சொற்கள்
  • கதை / குறுங்கதை, கட்டுரை - 250-500 சொற்கள்
  • சமூக / ஆய்வுக் கட்டுரை - 250-600 சொற்கள்
  • பத்தி எழுத்து - 150-400 சொற்கள்
  • உரையாடல், நேர்காணல் - 150-500 சொற்கள்

புகைப்படம், ஓவியம், கார்ட்டூன், இலக்கிய விமர்சனம் போன்றவையும் ஏற்கப்படும்.

What kinds of work can I submit?

  • Poetry (free verse / traditional / haiku) - 16-32 lines
  • Short story - 350-500 words
  • Story / flash fiction, essay - 250-500 words
  • Social / research essay - 250-600 words
  • Column writing - 150-400 words
  • Dialogue, interview - 150-500 words

Photography, art, cartoons and literary criticism are welcome too.

படைப்பின் எழுத்துரு, வடிவமைப்பு விதிகள் என்ன?

  • Paper: B5, ஓரங்கள் 1 inch, வரி இடைவெளி 1.15, Justify
  • தலைப்பு 16 pt Bold, உபதலைப்பு 14 pt Bold, எழுத்தாளர் பெயர் 12 pt Bold
  • எழுத்துருக்கள்: Bamini, Latha, Nirmala-UI அல்லது Unicode
  • Word (.doc/.docx) மற்றும் PDF கோப்புகள் இரண்டும் தேவை

What are the font and formatting rules?

  • Paper: B5, 1 inch margins, 1.15 line spacing, justified
  • Title 16 pt bold, subtitle 14 pt bold, author name 12 pt bold
  • Fonts: Bamini, Latha, Nirmala UI or Unicode
  • Both a Word (.doc/.docx) and a PDF file are needed

படைப்புகள் எப்படித் தெரிவு செய்யப்படுகின்றன?

படைப்பாற்றல், மொழிநடை, கருத்தின் புதுமை, உள்ளடக்கத் தரம், வாசிப்பு அனுபவம், சமூகப் பொருத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும். படைப்பு உங்கள் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்; பிறருடையதை நகலெடுக்கவோ AI மூலம் உருவாக்கவோ கூடாது. வேறு தளத்தில் ஏற்கனவே வெளிவந்திருந்தால் அதை அறியத்தர வேண்டும்.

How are entries selected?

Entries are chosen for creativity, style, originality of ideas, quality of content, reading experience and social relevance. The work must be your own - not copied from others and not made with AI. If it has already appeared elsewhere, you must tell us.

பழைய "நுட்பம்" இதழை எங்கே வாசிக்கலாம்?

1970 இல் வெளியான "நுட்பம்" இரண்டாவது இதழ் (73 பக்கங்கள்) நூல்கள் பக்கத்தில் உள்ளது. பக்கங்களைப் புரட்டி வாசிக்கலாம், PDF ஆகப் பதிவிறக்கலாம்.

Where can I read the old "Nutpam" magazine?

The second issue of "Nutpam" (73 pages), published in 1970, is on the Books page. You can turn its pages online or download it as a PDF.

தொடர்பு Contact

மன்றத்தை எப்படித் தொடர்பு கொள்வது?

  • மின்னஞ்சல்: thamizhiyam@gmail.com
  • தொலைபேசி: சிவமைந்தன் ந - 076 637 0873
  • அல்லது இணையதளத்தின் தொடர்புப் படிவத்தில் உங்கள் தகவலை அனுப்பலாம்.

How do I contact TLA?

  • Email: thamizhiyam@gmail.com
  • Phone: சிவமைந்தன் ந - 076 637 0873
  • Or send us a message through the contact form on this website.

மன்றத்தின் சமூக ஊடகப் பக்கங்கள் எவை?

Facebook, YouTube, Instagram ஆகியவற்றில் எம்மைப் பின்தொடரலாம். நிகழ்வுப் புகைப்படங்கள், காணொளிகள், அறிவிப்புகள் அங்கு வெளியிடப்படுகின்றன.

Where is TLA on social media?

Follow us on Facebook, YouTube and Instagram. Event photos, videos and announcements are posted there.

நிகழ்வு அறிவிப்புகளை எப்படி அறிவது?

நிகழ்வுகளின் திகதிகள், பதிவுகள், முடிவுகள் இணையதளத்தின் நிகழ்வுப் பக்கங்களிலும் எமது Facebook, Instagram பக்கங்களிலும் அறிவிக்கப்படும்.

How do I find out about events?

Event dates, registrations and results are announced on the website's event pages and on our Facebook and Instagram pages.

இந்த இணையதளத்தை யார் பராமரிக்கிறார்கள்?

மன்றத்தின் வலையமைப்பு அணி இணையதளத்தைப் பராமரிக்கிறது. இணையதளத்தில் தவறுகளையோ பிரச்சினைகளையோ கண்டால் தொடர்புப் படிவம் மூலம் அறியத்தாருங்கள்.

Who maintains this website?

TLA's Network team looks after the website. If you spot a mistake or a problem, please let us know through the contact form.

Tamil Literary Association, University of Moratuwa · தமிழ் இலக்கிய மன்றம்

TLA