அந்திமாலைப் பொழுதிலே பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமாகும் இவ் நிகழ்வு கல்விக்கு சரஸ்வதியும், செல்வத்திற்கு லஷ்மியும், வீரத்திற்கு துர்க்கையும் ஆகிய முப்பெரும் தேவிகளுக்கான இறை வழிபாட்டுடன் ஆரம்பமாகி இசை, நடனம், வில்லுப்பாட்டு, பல்லியம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் இரவுப்பொழுதினிலே இனிதே நிறைவேறும்